மதுரையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! - Seithipunal
Seithipunal


அடங்காத மர்மம் நபர்கள்! அடக்க முடியாமல் திணறும் தமிழக போலீஸ்! 

கோவையில் நேற்று 8 பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர் சமூகவிரோதிகள். குறிப்பாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்களை குறி வைத்து மட்டுமே இச்சம்பவங்கள் நிகழ்கிறது. 

கோவையில் மட்டுமே நடந்து வந்த நிலையில் இன்று காலையில் முதல் தமிழக முழுவதும் உள்ள பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலக குழுவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தாம்பரம், ராமநாதபுரம், திண்டுக்கல், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் வீடுகளில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டதில் இரண்டு கார்கள் மற்றும் இரு ஐந்து இருசக்கர வாகனங்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு எரிந்தன.

இந்நிலையில் தற்பொழுது மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டில் குடியிருக்கும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கிருஷ்ணன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கையில் இருந்த மூன்று பெட்ரோல் குண்டுகளை அவர் வீட்டின் வரண்டா மற்றும் காரின் மீது வீசி சென்று உள்ளனர். இது குறித்தான வீடியோ காட்சி தற்பொழுது பகிரப்பட்டு வருகிறது. ஆள் நடமாட்டம் மிக்க பகுதியில் துணிகரமாக இந்த செயலில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். 

பெட்ரோல் குண்டு வீசும் மர்ம நபர்கள் தமிழக முழுவதும் பரவி உள்ளதால் அவர்களைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால் தமிழக மக்களுக்கிடையே பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் இச்சம்பவங்கள் உண்டாக்குகின்றன என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Petrol bomb hurled at RSS leader house in Madurai


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->