மதுரை மாநாட்டில் தூக்கி வீசப்பட்ட தவெக தொண்டர் - விஜய்யின் பவுன்சர்கள் மீது பரபரப்பு புகார்.!!
petition against vijay bouncers for throw tvk fan in madurai conference issue
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர் கடந்த 21-ம் தேதி மதுரையில் நடந்த தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் எப்படியாவது பக்கத்தில் சென்று விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், விஜய் ரேம்ப் வாக் செய்த போது அந்த மேடையில் எகிறி குதித்து உள்ளே செல்ல முயன்றார்.
ஆனால் தலைவர் விஜய் உடன் இருந்த பவுன்சர்கள் சரத்குமாரை குண்டுகட்டாக தூக்கி வீசினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விஜய்யின் பவுன்சர்கள் மீது சரத்குமார் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரில் மதுரை தவெக மாநாட்டில், விஜய்யின் பவுன்சர்கள் தன்னை குண்டுகட்டாக தூக்கி வீசினர். இந்த சம்பவம் நடந்த பின்னர், தவெக நிர்வாகிகள் சிலர், என்னிடம் சமாதானம் பேசியதால், தூக்கி வீசப்பட்டது நான் இல்லை என்று மறுப்பு வீடியோ வெளியிட்டிருந்தேன்.
ஆனால் அதன்பின்னர் கட்சியினர் என்னை கொண்டுகொள்ளவில்லை. என்ன விஷயம் என்று நேரில் வந்து விசாரிக்கவில்லை. கட்சிக்கு அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே என்னை மூளைச்சலவை செய்தனர். எனவே என்னை தூக்கி வீசிய பவுன்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரித்துள்ளார்.
English Summary
petition against vijay bouncers for throw tvk fan in madurai conference issue