தேர்தல் அதிகாரி மீது புகார் - நீலகிரியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மீது, உதவி செலவின பார்வையாளர் சரவணன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"குறிப்பிட்ட வேட்பாளர் ஒருவரின் செலவினக் கணக்கை மறுபரிசீலனை செய்வதற்கான வழிகளை கண்டறிய மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பிக்கிறார். செலவை குறைக்க தேர்தல் அதிகாரி என்னை தொடர்ந்து துன்புறுத்துகிறார்.

உதவி செலவின பார்வையாளராக நியாயமான தேர்தலை உறுதி செய்யும் எனது உரிமைகள் ஆபத்தான நிலையில் இருக்கின்றன. செலவின பதிவுகளால் வேட்பாளருக்கு பாதகமாக ஏதேனும் நடந்தால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டல் விடுக்கிறார். 

நீலகிரி தொகுதியில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். தேர்தல் அதிகாரி மீது புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petition against neelagiri district election officer


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->