“அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது”...! வரி, பொருளாதாரம், ஈரான் மீது கடும் எச்சரிக்கை! -டொனால்டு ட்ரம்ப் பாராளுமன்ற உரை
America golden age begun Strong warning taxes economy and Iran Donald Trump speech Parliament
டொனால்டு ட்ரம்ப் தனது இரண்டாவது ஆட்சி காலத்தின் முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றி, அமெரிக்காவின் வளர்ச்சி பாதையை விரிவாக விளக்கினார்.
இந்த உரையின்போது அவர் தெரிவித்த்ததாவது,"தாம் பதவியேற்று ஒரு ஆண்டுக்குள், அமெரிக்கா இதுவரை காணாத மாற்றத்தை கண்டுள்ளது. தனது ஆட்சி “அமெரிக்காவின் பொற்காலம்” என திகழ்கிறது என்றும், இது நாட்டின் புதிய திருப்புமுனை என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் வலுப்பெற்று வருகிறது. நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக கட்டுப்பாட்டில் உள்ளன. ஒரு ஆண்டுக்கு முன்பு நிலவிய பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உலக அரங்கில் அமெரிக்காவின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்துள்ளது; எதிரி நாடுகள் அச்சத்தில் உள்ளன என்றார்.பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதித்ததால், அவற்றுக்கு எதிராக கடுமையான வரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், அதுவே அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார்.
பல ஆண்டுகளாக அமெரிக்காவை ஏமாற்றிய நாடுகள் தற்போது நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை வரியாக செலுத்தி வருகின்றன என்றார்.மேலும், வெளிநாடுகளிடமிருந்து கிடைக்கும் வரி வருவாய், அமெரிக்க மக்களின் வருமான வரிச் சுமையை குறைக்க உதவுகிறது.
இந்த வரி கொள்கையின் மூலம் பல நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; இப்போது அமெரிக்காவே அதிக லாபம் காண்கிறது என தெரிவித்தார்.இந்த பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை ரத்து செய்த அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பை அவர் துரதிருஷ்டவசமானதாக விமர்சித்தார்.
இருந்தாலும், ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் தொடரும் என்றும், வரி வசூல் மூலம் நாட்டின் வளர்ச்சியும் பாதுகாப்பும் பலப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதிகளவில் நாடுகடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சட்டவிரோத குடியேறிகளுக்கு வணிக ஓட்டுநர் உரிமம் வழங்குவதை தடுக்க புதிய சட்டம் நிறைவேற்ற பாராளுமன்றத்திடம் கோரிக்கை வைத்தார்.
மேலும், ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ நடவடிக்கையின் மூலம் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தடுக்கப்பட்டதாகவும், இல்லையெனில் அந்த நாடு உலகளவில் பயங்கரவாதத்தை பரப்பியிருக்கும் என்றும் தெரிவித்தார்.
ஈரான் அணு ஆயுதம் பெறுவதற்கு எந்த சூழலிலும் அனுமதி இல்லை என்றும், அமெரிக்காவை அச்சுறுத்தும் ஏவுகணைத் திட்டங்களை அமெரிக்கா ஒருபோதும் சகிக்காது என்றும் கடுமையாக எச்சரித்தார்.
English Summary
America golden age begun Strong warning taxes economy and Iran Donald Trump speech Parliament