திருச்செந்தூர் கோயிலில் பஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்படுமா..? கோயில் நிர்வாகம் பதில்..!
Permission to visit Panchalingam at Tiruchendur temple
திண்டுக்கல்லைச் சேர்ந்த பட்டம் என்பவர், திருச்செந்தூர் கோயிலில் பஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்படும் என கோயில் மனுதாக்கல் செய்திருந்தார். இதற்கு கோவில் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்தது.
திருச்செந்தூர் முருகன் கோவிலின் மூலவர் சன்னதிக்கு பின்புறம் பஞ்சலிங்கம் உள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு பஞ்சலிங்கத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு முன் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது, திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள பஞ்சலிங்கத்தை வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று பட்டம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; திருச்செந்தூர் கோயிலில் பஞ்சலிங்கத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதாவது, பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி கூட்டம் குறைவாக இருந்தால் தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என்றும், கூட்டம் அதிகமாக இருந்தால் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது. கூட்டத்தைப் பொறுத்து அனுமதி தர நடவடிக்கை எடுக்க கூறிய நீதிமன்றம் கோயில் நிர்வாகத்தின் அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்துள்ளது.
English Summary
Permission to visit Panchalingam at Tiruchendur temple