சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றுவர ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.. சி.ஐ.டி.யு.தீர்மானம்!
Permission should be granted for autos to go to Sorimuthu Ayyanar Temple CITUResolution
அகஸ்தியர் கோவில் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று வர ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு. நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தின் 10-வதுமாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் சி.ஐ.டி.யு. நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தின் 10-வது மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. மூத்த தலைவர் முத்துகிருஷ்ணன் கொடியேற்றினார். மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.
இந்த மாநாட்டில் அகஸ்தியர் கோவில் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று வர ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் ரூ.4 லட்சத்திற்கான வீடு கட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆட்டோக்களுக்கு விதிக்கப்படும் ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.,
சொரிமுத்து அய்யனார் கோவிலில் வருகிற 24-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது. இந்தநிலையில் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் அகஸ்தியர்பட்டி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டுமே திருக்கோவிலுக்கு சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தனியார் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Permission should be granted for autos to go to Sorimuthu Ayyanar Temple CITUResolution