ரெயில் நிலையத்தில் மல்லிகைப்பூ கடைக்கு அனுமதி...! - தெற்கு ரெயில்வே 
                                    
                                    
                                   Permission for jasmine flower shops railway stations Southern Railway
 
                                 
                               
                                
                                      
                                            தெற்கு ரெயில்வே, மதுரை ரெயில் நிலையத்தில் முதன்முறையாக பூக்கடைக்கு அனுமதி வழங்கியுள்ளது.அவ்வகையில், மதுரை ரெயில் நிலையத்தில் மதுரையின் பிரபலமாக 'மல்லிகைப்பூ' விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,ரெயில் நிலையத்தில் குளிர்சாதன பெட்டியில் வைத்து மல்லிகைப்பூ விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
அதன் அறிவிப்பாக, மிகவும் பிரபலமான மதுரை மல்லிகைப்பூவை ரெயில் பயணிகள் வாங்கும் வகையில் ரெயில் நிலையத்தில் விற்பனை தொடங்குகிறது.
இதனால், மதுரைக்கு வரும் மக்கள் ஊரின் சிறப்பம்சமான மதுரை மல்லிகையை சிரமமின்றி வாங்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்.இதனால் பூ தொழில் செய்வோருக்கு நல்லது பயக்கும் வகையில் அமைந்துள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Permission for jasmine flower shops railway stations Southern Railway