பேரறிவாளன் விடுதலை.. மனவேதனை அளிக்கிறது.. புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி.! - Seithipunal
Seithipunal


பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடுபவர்கள் வக்கிரபுத்தி கொண்டவர்கள் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள் பேரறிவாளன் விடுதலை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலையாளிகளை அவரது குடும்பத்தார் மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம். மேலும் பேரறிவாளன் விடுதலையை இனிப்பு வழங்கி பட்டாசு வெடிப்பது தங்களுக்கு மன வேதனை அளிப்பதாகவும், முன்னாள் பிரதமரை கொன்றவர்கள் விடுதலையை கொண்டாடுவது அவர்களின் வக்கிரபுத்தியைக் காட்டுகிறது என்று விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் அவரிடம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பேரறிவாளனை கண்டுபிடித்து வருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் இது தொடர்பாக நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perarivalan release not accept Narayanasamy


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->