மாட்டு பொங்கல் : நாகையில் மீன்பிடித் துறைமுகத்தில் குவியும் பொதுமக்கள் - விற்பனையாளர்கள் மகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் தைத்திங்கள் முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி, நேற்று பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து இன்று உழவர் திருநாளான மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றது. 

அந்தவகையில், விவசாயிகள் உழவிற்கு மிகவும் முக்கியமான ஒன்றான மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து, பொங்கல் வைத்தும் படைப்பார்கள். அதில் சிலர் அசைவ உணவுகளை சமைத்து சாமிக்கு படைத்தும் உண்ணுவார்கள்.

அதன் காரணமாக, நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை,நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், கோடியக்கரை, வேதாரண்யம் உள்ளிட்ட 27 மீனவர் கிராமத்தில் சுமார் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு, 700 விசைப்படகுகள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், இன்று மாட்டுப்பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை தினம் என்பதால் வெளிமாநில வியாபாரிகள், வெளி மாவட்ட வியாபாரிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் என்று ஏராளமானோர் குவிந்தனர். 

இதேபோல் நாகை, வேளாங்கண்ணி, சிக்கல், கீழ்வேளூர் மற்றும் திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே வந்து மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்கி செல்கின்றனர். 

இதனால், மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது. அந்தவகையில், வஞ்சிரம் மீன் ரூ. 1,000 த்திற்கும், அதேபோல் சீலா ரூ. 400, துள்ளு கெண்டை ரூ. 250, நெத்திலி மீன் ரூ.200, இறால் ரூ. 350க்கும் விற்பனையானது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples flock in nagai fish portish


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->