காப்பீட்டுத் திட்டம் என கூறி பாஜகவுக்கு ஆள் பிடித்த நபரிடம் மக்கள் வாக்குவாதம்..!!
People argue with BJP favorite person viral video
பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதாக கூறி பொதுமக்களை பாஜகவில் இணைப்பதாக குற்றச்சாட்டு..!!
பாஜகவில் உறுப்பினர் சேர்க்கைக்காக மிஸ்டு கால் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் பல கோடி மக்கள் பாஜகவில் இணைந்தனர். இந்த திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால் பிற கட்சி தலைவர்களின் பெயரிலும் உறுப்பினர் அட்டை வெளியானது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் நாகமானிக்கம் என்பவர் பிரதமர் காப்பீடு அட்டை இல்லாத பொதுமக்களுக்கு பிரதமந்திரி காப்பீட்டு விண்ணப்பங்களை பூர்த்திசெய்து கொடுத்து வந்துள்ளார்.

அதற்காக கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த சிலரிடம் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை வாங்கியுள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அபூதாகிர் என்பவரது மனைவியின் செல்பேசி எண்ணிற்கு பா.ஜ.கவில் சேர்ந்ததாக குறுந்தகவல் வந்துள்ளது.
இது குறித்து நாகமாணிக்கத்திடம் விளக்கம் கேட்டு அபூதாகிர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. பாஜகவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றால் அனுமதி கேட்க வேண்டும் எனவும் அபூதாகிர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
English Summary
People argue with BJP favorite person viral video