அம்பேத்கர் சிலையை கொளுத்திய வடக்கு காலனியைச் சேர்ந்த நவீன்குமார் கைது! தருமபுரி போலீசார் அறிக்கை!
Pennakaram Ambedkar Statue Fire One person arrested
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அம்பேத்கர் சிலைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வாய்த்த சம்பவம் குறித்து தருமபுரி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பென்னாகரம் அரசு மருத்துவமனை அருகே இரும்பு கிரில் கேட் அமைக்கப்பட்டு, அதன் உள்ளே பீடத்தின் மீது அம்பேத்கர் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று 19.05.2025 ஆம் தேதி இரவு அண்ணா நகர், வடக்கு காலனியைச் சேர்ந்த நவீன்குமார் (25) த/பெ ராஜலிங்கம் என்பவர் மேற்படி சிலையின் பீடத்தின் அடியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதை பார்த்த சிலர் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தும், பென்னாகரம் விசிக தொகுதி துணைச் செயலாளரும், ஆட்டோ சங்க முன்னாள் தலைவருமான நாகராஜ்(38) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பென்னாகரம் காவல் நிலைய குற்ற எண்: 147/2025 u/s 196,326 BNS & 3 (1) of TNPPDL Act -ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மேற்படி நவீன்குமர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Pennakaram Ambedkar Statue Fire One person arrested