மகளின் ஆபாச படங்களை விற்பனை செய்த பெற்றோர்கள் - அதிர்ச்சியில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கடந்த வாரம் புகார் ஒன்று வந்தது. அந்தப் புகாரைக் கொடுத்தவர், இரண்டு செல்போன்களை போலீசாரிடம் கொடுத்து, அதில் 'வாட்ஸ் அப்' மூலம் குறிப்பிட்ட ஒரு சிறுமியின் ஆபாச புகைப்படங்கள், ஏராளமாக இருப்பதாகவும், அந்த ஆபாச புகைப்படங்கள் ஏராளமானோருக்கு 'வாட்ஸ் அப்' மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் செல்போன் படங்களை ஆய்வு செய்து, சிறுமியிடம் உல்லாசத்தில் ஈடுபடும் இரண்டு பேரை அடையாளம் கண்டு கைது செய்தனர். இருவர் மீதும், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தியதில், சிறுமியை உல்லாசத்தில் ஈடுபடுத்தியதற்கு, அவரின் பெற்றோர்களே உடந்தையாக இருந்துள்ளது தெரிய வந்தது. 

தொடர்ந்து போலீசார் சிறுமியின் தாய், தந்தையும் கைது செய்தனர். மேலும், படத்தை விலைக்கு வாங்கி பார்த்த, சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள். பெற்றோர் சம்மதத்துடன் அரங்கேற்றப்பட்டுள்ள இந்த பாலியல் பட வியாபாரம், சென்னை போலீஸ் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த வழக்கில் கைதாகி உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பான விவரங்களை, போலீசார் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

parents arrested for sales daughter obscene vedio in chennai mailapur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->