மாருதி சுசுகி விக்டோரிஸ் புதிய மாடல் அறிமுகம்!பலவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும்! விலையில் எவ்வளவு தெரியுமா?
Maruti Suzuki Victoris new model launched Available in various engine options Do you know how much it costs
இந்திய ஆட்டோமொபைல் துறையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய விக்டோரிஸ் (Victoris) மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு பவர்டிரெய்ன் விருப்பங்களுடன் வந்துள்ள இந்த கார், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற முன்னணி SUV மாடல்களுக்கு நேரடி போட்டியாக திகழ்கிறது.
புதிய விக்டோரிஸ் மாடலில் பெட்ரோல், ஸ்டிராங் ஹைப்ரிட், CNG மற்றும் AWD உள்ளிட்ட பரந்த பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
1.5 லிட்டர் K15C பெட்ரோல் எஞ்சின் – 103 bhp பவர் மற்றும் 139Nm டார்க் வழங்குகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் இணைக்கப்பட்டுள்ளன.
1.5 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் மாடல் – e-CVT உடன், சிறந்த செயல்திறன் மற்றும் எகோ, பவர், நார்மல் போன்ற டிரைவ் மோட்களும் வழங்கப்படுகிறது. குறுகிய தூர பயணங்களுக்கு பியூர் EV மோடும் உள்ளது.மைலேஜ் வகையில், இந்த கார் தனது தரத்தை நிரூபிக்கிறது.
பெட்ரோல் ஹைப்ரிட் மாடல் – லிட்டருக்கு 28.65 கிமீ மைலேஜ், இது தனது பிரிவில் அதிகம் வழங்கும் மாடலாகும்.S-CNG மாடல் – 27.02 கிமீ/கிலோ மைலேஜ் வழங்குகிறது. இந்த மாடலில் அண்டர்பாடி CNG டேங்க் பயன்படுத்தப்பட்டுள்ளமை, மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் முயற்சியாகும்.
மேலும், விக்டோரிஸ் மாடலில் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ALLGRIP செலக்ட் ஆல்-வில்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய SUV சந்தையில் வலுவான இடத்தை பிடிக்க முயலும் மாருதி சுசுகியின் இந்த புதிய முயற்சி, வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்டோரிஸ், அதிக மைலேஜ், மேம்பட்ட டிரைவ் மோட்கள் மற்றும் செலவுசெலுத்தும் சிக்கனத்தை ஒரே நேரத்தில் வழங்குவதால், க்ரெட்டா–செல்டோஸ் போட்டியில் வலுவான சவால் வீசும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
English Summary
Maruti Suzuki Victoris new model launched Available in various engine options Do you know how much it costs