புதுச்சேரி அரசியலில் பரபரப்பு! பா.ஜ.க. முன்னாள் தலைவர் கட்சியில் இருந்து 'திடீர்' விலகல்!
Excitement in Puducherry politics Former BJP leader suddenly leaves the party
புதுச்சேரி பா.ஜ.க. அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் நியமன எம்.எல்.ஏ.வும், நீண்டகாலமாக புதுவை பா.ஜ.க. தலைவராக இருந்த சாமிநாதன், தனது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
சமீப மாதங்களில் கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்த அவர், இன்று வெளியிட்ட அறிக்கையில்,“கடந்த 25 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தேன். எனது அரசியல் பயணத்தின் போது என்னுடன் இணைந்து செயல்பட்ட நிர்வாகிகளுக்கும், என்னை நம்பி பொறுப்பு அளித்த தேசிய தலைமைக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி பா.ஜ.க.வில் எந்தவித தொடர்பும் இல்லாமல் முழுமையாக விலகுகிறேன்.
ஆனால், புதுவை வளர்ச்சிக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன். மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன். ஊழலற்ற, நேர்மையான, புதிய தலைமுறையை முன்னிலைப்படுத்தும் அரசை உருவாக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபடுவேன்,” என்று தெரிவித்துள்ளார்.
சாமிநாதன் தொடர்ந்து சுமார் 8 ஆண்டுகளாக புதுச்சேரி பா.ஜ.க. தலைவராக பணியாற்றியவர். மேலும், கடந்த 25 ஆண்டுகளாக கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து சேவை ஆற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திடீர் விலகல், புதுவை பா.ஜ.க.வின் உள்துறை அரசியல் அமைப்பில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
English Summary
Excitement in Puducherry politics Former BJP leader suddenly leaves the party