முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் – ரூ.15,516 கோடி முதலீடு ஈர்ப்பு
Chief Minister Stalin returns to Chennai after completing foreign trip attracts investment of Rs 15516 crore
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்ட தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் இறங்கிய ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். "வருக! வருக!! எங்கள் குடும்ப தலைவரே" என்ற வாசகத்துடன் பேனர்கள், கொடிகள், மலர்ச்சாலைகள் என விமான நிலையம் பண்டிகை சூழலை ஒத்தது.
ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் போது மொத்தம் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தானது. இதன் மூலம் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.ஜெர்மனியில் மட்டும் 26 MoU கையெழுத்தானது. இதன் மதிப்பு ரூ.7,020 கோடி. இதன் மூலம் 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.இங்கிலாந்தில் 7 நிறுவனங்களுடன் MoU கையெழுத்தானது. இதன் மூலம் ரூ.8,196 கோடி முதலீடு வரவுள்ளது. இதன் அடிப்படையில் 2,293 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான இந்த பயணம், முதலீட்டு ஈர்ப்பு, வேலை வாய்ப்பு உருவாக்கம், தொழில் வளர்ச்சி ஆகிய துறைகளில் முக்கிய முன்னேற்றம் கண்டதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
Chief Minister Stalin returns to Chennai after completing foreign trip attracts investment of Rs 15516 crore