கார் மீது பைக் உரசியதால் ஆத்திரம்: பைக்கை விரட்டி சென்று மோதி வாலிபரை கொலை செய்த கணவன், மனைவி; சிக்கிய திகில் ஆதாரம்..!
Husband and wife who killed a young man by chasing the bike after it collided with a car in Bengaluru
பெங்களூரு, ஜே.பி.நகர் 07வது கிராஸ் ஸ்ரீராம் லே-அவுட் பகுதியில், கடந்த 25-ஆம் தேதி இரவு, பைக் மீது கார் மோதியதில் கோனனகுண்டேயை சேர்ந்த உணவு விற்பனை பிரதிநிதியான தர்ஷன் (24) என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது நண்பர் வருண் (24) படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து ஜே.பி.நகர் போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில்திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பைக் மீது வேண்டும் என்றே கார் மோதி செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்துள்ளது. அதன் அடிப்படையில் வாகன பதிவு நம்பரை வைத்து ஜிம் பயிற்சியாளர் மனோஜ்குமார் (34), அவரது மனைவி ஆர்த்தி சர்மா (30) ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபற்றி தெற்கு போலீஸ் துணை ஆணையர் லோகேஷ் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கேரளாவை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் மனோஜ்குமார், தன் மனைவி ஆர்த்தி சர்மாவுடன், பெங்களூரில் வசித்து வருகிறார்.

இருவரும் கடந்த 25-ஆம் தேதி இரவு வெளியே சென்றுவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பிய போது, மனோஜ்குமார் கார் கண்ணாடி மீது, தர்ஷன் ஓட்டி சென்ற பைக் உரசியதில், கண்ணாடி உடைந்துள்ளது. அத்துடன், பைக்கை நிறுத்தாமல் தர்ஷன், அவரது நண்பர் வருண் வேகமாக சென்றுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த தம்பதியர் காரில் அவர்களை விரட்டினர். 02 கி.மீ., விரட்டிச் சென்று, பைக் மீது காரால் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளனர். இதனால், பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட தர்ஷன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதற்கு பின்னர், சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த தம்பதி, தங்கள் காரின் உடைந்த கண்ணாடியை அங்கிருந்து எடுத்து சென்று ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளனர். இந்த தம்பதி மீது தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Husband and wife who killed a young man by chasing the bike after it collided with a car in Bengaluru