சிறுமிக்கு கட்டாய திருமணம்., கம்பி எண்ணும் பெற்றோர்கள்.! பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணவன்.!
Parents arrested by police for married there children
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் அருகே இருக்கும் நெடுங்குளம் என்ற பகுதியில் சடையாண்டி என்ற 30 வயது நபர் வசித்து வருகின்றார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 16 வயது சிறுமியை திருமணம் செய்து இருக்கிறார்.
இந்த திருமணத்திற்கு சிறுமியின் பெற்றோரும் உடந்தை. இத்தகைய சூழலில் குழந்தைகள் நல அமைப்பினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
சடையாண்டியின் வீட்டிற்கு உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு கட்டாயமாக திருமணம் செய்யப்பட்டதும், பாலியல் துன்புறுத்தல் அரங்கேறியதும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் சிறுமியின் தாய், தந்தை மற்றும் சடையாண்டியை கைது செய்து ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
Parents arrested by police for married there children