‘டிமான்ட்டி காலனி 3’ சேட்டிலைட் & OTT உரிமை ரூ.50 கோடிக்கு விற்பனை...! எந்த சேனல் தெரியுமா...?
Demonte Colony 3 satellite and OTT rights sold 50 crore Do you know which channel
2015-ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படம், தமிழ் சினிமாவில் ஹாரர்–த்ரில்லர் வகையை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது. இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் வித்தியாசமான கதை சொல்லல், பரபரப்பான திரைக்கதை ஆகியவை இணைந்து, ரசிகர்களிடையே இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

அந்த வெற்றியை தொடர்ந்து, கிட்டத்தட்ட ஒரு தசாப்த இடைவெளிக்குப் பிறகு வெளியாகிய ‘டிமான்ட்டி காலனி 2’ படமும் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் ரசிகர்களை திருப்திப்படுத்தியது. அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படம், ஹாரர் உலகத்தை மேலும் விரிவாக்கியது.
இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தின் பணிகள் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. கோடை விடுமுறையை குறிவைத்து படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில் வெளியாகிய பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளன.
மேலும், இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பிரபல ஓடிடி தளம் ஜீ5 ரூ.50 கோடிக்கு கைப்பற்றியுள்ளது என்ற தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
நடிகர் அருள்நிதியின் திரைவாழ்க்கையில், இதுவரை இல்லாத அளவில் அதிகமான ‘ப்ரீ-பிசினஸ்’ செய்த படமாக ‘டிமான்ட்டி காலனி 3’ புதிய சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Demonte Colony 3 satellite and OTT rights sold 50 crore Do you know which channel