இந்தி வர்ணனையில் மொழி சர்ச்சை… சஞ்சய் பங்கர் கருத்துக்கு எதிர்ப்பு...! - Seithipunal
Seithipunal


இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று கடைசி ஓவர் வரை சென்ற பரபரப்புடன் நிறைவடைந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை சேர்த்தது.இதனைத் தொடர்ந்து இலக்கை துரத்திய இந்திய அணி, 49 ஓவர்களிலேயே 306 ரன்களை குவித்து, 6 விக்கெட்டுகள் இழப்புடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1–0 என முன்னிலை பெற்றுள்ளது.போட்டியின் பரபரப்பைத் தொடர்ந்து, இந்தி வர்ணனையின் போது நிகழ்ந்த ஒரு உரையாடல் புதிய சர்ச்சைக்கு தீப்பொறியாக அமைந்தது.

வர்ணனையாளர்கள் வருண் ஆரோன் மற்றும் சஞ்சய் பங்கர் உரையாடிக் கொண்டிருந்த வேளையில், வாஷிங்டன் சுந்தர் பந்துவீசிய சமயத்தில், “கீப்பர் கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தருடன் தமிழில் உரையாடலாமே” என்று வருண் ஆரோன் கூறினார்.

இதற்கு பதிலளித்த சஞ்சய் பங்கர், “தென்னிந்தியர்கள் தங்கள் மாநில மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், இந்திதான் மிகவும் முக்கியமான மொழி. அதுவே நமது தேசிய மொழி” என கூறினார்.

இந்த கருத்து வெளியானதும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினைகள் எழுந்தன. இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ தேசிய மொழி இல்லை என்பதையும், மொழி பன்மை நாட்டின் அடையாளம் என்பதையும் சுட்டிக்காட்டி பலரும் பங்கரின் கருத்தை விமர்சித்து வருகின்றனர். போட்டியின் வெற்றியைக் காட்டிலும், இந்த மொழி சர்ச்சையே தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Language controversy Hindi commentary Opposition Sanjay Bangars comment


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->