பானி பூரி கடையில்.. மது போதையில் தகராறு செய்த 4 பேர்.! வடமாநில தவறுக்கு ஏற்பட்ட சோகம்.!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் பானிபூரி கடை ஒன்றில் சாப்பிட்டு விட்டு மதுபோதையில் நான்கு பேர் கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வட மாநிலத்தைச் சேர்ந்த பப்பு என்ற நபர் பல்லடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு பானி பூரி கடையை நடத்தி வந்துள்ளார். சாந்தனு, சத்திபிரனவ், பாலகிருஷ்ணன், சபிக்ஷன் என்ற நான்கு பேர் நல்ல மது போதையில் அந்த கடைக்கு வந்துள்ளனர்.

அவர்கள் நான்கு பேரும் பப்புவின் கடையில் பானி பூரி வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு அதற்கு பணம் கொடுக்காமல் பப்புவுடன் சண்டை போட்டு அவரை சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இதனால் அப்பகுதியில் கூட்டம் கூட துவங்கியது.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பல்லடம் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி அவர்கள் நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இந்த தகராறு குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Palladam 4 men attack north Indian In panipoori shop


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->