காளான் பட்டாணி குழம்பு... இந்த taste -க்கு முன்னாடி பிரியாணி taste தோத்துடும்...! - Seithipunal
Seithipunal


காளான் பட்டாணி குழம்பு
தேவையான பொருட்கள்:
பொருள்    -     அளவு
பச்சை பட்டாணி    -     100 கிராம்
காளான்    -     கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது    -     1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம்    -     1
தக்காளி    -     1
தேங்காய் துருவல்    -     கால் கப்
முந்திரி    -     8
மிளகாய் தூள்    -     அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்    -     அரை டீஸ்பூன்
மல்லித் தூள்    -     அரை டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா    -     கால் டேபில் ஸ்பூன்
கடுகு    -     கால் டீஸ்பூன்
சீரகம்    -     1 டீஸ்பூன்
வெந்தயம்    -     கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு    -     1 டீஸ்பூன்
கறிவேப்பிலை    -     1 கொத்து
எண்ணெய்    -     தேவைக்கேற்ப
உப்பு    -     தேவைக்கேற்ப


செய்முறை :
முதலில் பட்டாணியை வேக வைத்துக் கொள்ள வேண்டும். காளானை நறுக்கிக் கொள்ள வேண்டும்.ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய காளானை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, இறக்க வேண்டும்.பின்பு மிக்ஸியில் முந்திரி மற்றும் தேங்காய் சேர்த்து, வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.அடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மசாலாக்களானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, கலவையும் எண்ணெயும் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.பின்பு அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து 3 நிமிடம் கிளறி, 3 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் காளான் மற்றும் பட்டாணியை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான காளான் பச்சை பட்டாணி குழம்பு ரெடி.
குறிப்பு : காளானுக்கு பதிலாக காலிஃப்ளவர் சேர்த்தும் செய்யலாம்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mashroom peas gravy recipe


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->