தனிநபர் போராட்டம்..கேள்வி கேட்க ஆதரவின்றி தவிக்கும் இளைஞர் கூட்டம்!
Individual struggle A group of youth suffering without support to ask questions
துணைநிலை ஆளுநர் மற்றும் தலைமை செயலரை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு தனி நபர் போராட்டம் நடத்திய மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதனை போலீசார் கைது செய்தனர்.
வயது தளர்வு கேட்டு தலைமைச் செயலகம் அருகே புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் தனிநபர் போராட்டம் நடத்தினார்.
கீழே உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகை பிடித்து தலைமை செயலக வாயிலில் நின்ற சுவாமிநாதன் பெரியக்கடை காவல் நிலையத்தார் கைது செய்தனர்.
துணைநிலை ஆளுநரே! தலைமைச் செயலரே!வயதுத் தளர்வு தடுப்பதில் உங்களுக்கு என்ன லாபம்!வயது தளர்வு கொடு திறமையுள்ளவனை தேர்வு செய்!குறிப்பிட்ட ஆண்டுகளில் பிறந்தவர்களை அரசு வேலை வாய்ப்புகளில் புறக்கணிப்பது சரியா?நீதிமன்றங்கள் பரிந்துரை செய்,தும் வயதுத் தளர்வு மறுப்பது ஏன்?
8 யூனியன் பிரதேசங்களில் 7 யூனியன் பிரதேசங்கள் வயது தளர்வு தரும் போது புதுச்சேரி மட்டும் மறுப்பது ஏன்?அரசியல் கட்சிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் மௌனித்து போனதனால் தனிநபர் போராட்டம்
கேள்வி கேட்க ஆதரவின்றி தவிக்கும் இளைஞர் கூட்டம்.
பட்டதாரி இளைஞர்களை அழவைத்து ஆட்டிப்படைக்கும் ஆளுநர் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம், தட்டிக் கேட்க தைரியம் இல்லாத கையாலாகாத சட்டமன்றம்தன்மானம் உள்ளவர்கள் துணிந்து வரட்டும் என்று புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
English Summary
Individual struggle A group of youth suffering without support to ask questions