காலிஃப்ளவர் சில்லி ஃப்ரை easy -ஆ quick -ஆ பண்ணிடலாம் வாங்க...!
cauliflower chilli fry recipe
காலிஃப்ளவர் சில்லி ஃப்ரை
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
காலிஃப்ளவர் - ஒன்று
உருளைக்கிழங்கு - கால் கிலோ
தக்காளி - கால் கிலோ
பச்சைமிளகாய் - 6
பூண்டு பல் - 6
இஞ்சி - ஒரு சிறியத் துண்டு
எண்ணெய் - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வெங்காயம் - 4
லவங்கப்பட்டை - 2
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை :
முதலில்,வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், மல்லித்தழை அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு அரை வேக்காடாக வேக வைக்கவும்.
வேகும்போதே அதில் உப்பு, மஞ்சள் தூள், விதை நீக்கிய மிளகாய் வற்றல் மற்றும் பொடித்த லவங்கப்பட்டை ஆகியவற்றைச் சேர்க்கவும்.உருளைக்கிழங்கை தோலுரித்து சிறு துண்டங்களாக நறுக்கி சிறிது உப்பில் பிரட்டி எண்ணெயில் வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
பிறகு அதில் வேக வைத்துள்ள காலிஃப்ளவரையும் போட்டு கிளறி விடவும். அதன் பின்னர் தக்காளி, வறுத்த உருளைத்துண்டுகள், சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக விடவும் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வெந்ததும் இறக்கவும்.சுவையான காலிஃப்ளவர் சில்லி ப்ரை தயார்.
English Summary
cauliflower chilli fry recipe