'வில்லிசை வேந்தர்' பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம் மறைவு.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


பிரபல இசை கலைஞர் வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் சத்திரம் புதுக்குளம் கிராமத்தில் பிறந்தவர் சுப்பு ஆறுமுகம் (வயது 93). கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன், சுப்பையா பிள்ளை ஆகியோரின் குழுவில் இருந்து வில்லுப்பாட்டு பயின்ற இவர் வில்லிசை வேந்தர் என்று அழைக்கப்படுகிறார்.

கடந்த 40 வருடங்களாக ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை வில்லுப்பாட்டின் மூலமாக பொது மக்களுக்கு பாடி வந்தவர் சுப்பு ஆறுமுகம். மேலும், இவர் மகாத்மா காந்தி, பாரதி, புத்தர், திலகர் ஆகிய கதைகளை வில்லுப்பாட்டின் மூலமாக பாடியுள்ளார்.

இந்த நிலையில் இன்று இவர் வயது மூப்பின் காரணமாக சென்னை கேகே நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். தற்போது அவரது மறைவிற்கு கட்சி தலைவர்களும் பல்வேறு பிரபலங்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் 'புகழ்பெற்ற வில்லிசை பாட்டு கலைஞர் 'பத்மஸ்ரீ' சுப்பு ஆறுமுகம் (வயது 93). அவர்கள் வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்றறிந்து வேதனையடைகிறேன்.

இளமை காலம் முதலே தமிழ் மண்ணின் மரபார்ந்த கலையான வில்லுப்பாட்டில் தேர்ச்சி பெற்ற வில்லிசை வேந்தர் என போற்றும் நிலைக்கு உயர்ந்தவர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகர் நாகேஷ் ஆகியோரின் திரைப்படங்களிலும் தனது பங்களிப்பை அவர் செய்துள்ளார. மூத்த கலைஞரான திரு சுப்பு ஆறுமுகம் அவர்களின் இழப்பால் துயரில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், கலையுத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Padmasree Subbu Arumugam passed away cm Stalin's condolence


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->