வன்மையாக கண்டிக்கிறேன்! போர்க்கொடி தூக்கிய அதிமுக முன்னாள் சபாநாயகர்! நேற்று இரவு நடந்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் ஆயிரம் ஆண்டு பழமையான சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற ஸ்தலமான 'அவிநாசி லிங்கேஸ்வரர்' திருத்தலத்தில், நேற்று இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 63 நாயன்மார்கள் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழும்பித்துவரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகருமான பி.தனபால் எம்எல்ஏ., தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "எனது தொகுதிக்குட்பட்ட, 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அவிநாசி லிங்கேஸ்வரர்  கோவிலில், நேற்று இரவு சமூக விரோதிகளால் 63 நாயன்மார்கள் சிலைகள் அருகே உள்ள சிலைகளை சேதப்படுத்தபட்டுள்ளது
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை கொடுக்க வலியுறுத்துகிறேன் பிரசித்த பெற்ற கோவிலின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள கண்டன செய்தியில், "திமுக ஆட்சிக்கு வந்தபின், கோவில்கள் தாக்கப்படுவதும், மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதும் தொடர்கிறது. ஆனால், உண்மையான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதாகத் தெரியவில்லை. 

கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் இந்து சமய அறநிலையத் துறை எதற்கு, அமைச்சர் எதற்கு? மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இனியும் இது போல கோவில்கள் தாக்கப்படுவது தொடர்ந்தால், அதன் எதிர்விளைவுகளுக்கு திமுக அரசே பொறுப்பு" என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

P Dhanabal Condemn avinasi Temple attack


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->