சஞ்சு வந்தாலே சர வெடிதான்.. 08 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி சென்னை அபார வெற்றி..!
Chennai defeats Delhi
19 வது ஐபிஎல் கிரிக்கெட் கோப்பைக்கான போட்டி நாட்டின் பல மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், 48 வது லீக் ஆட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில், சென்னை - டேலி அணிகள் மோதின.
போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டின் செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பதும் நிசங்க (19), ராகுல் (12), நிதிஷ் ராணா (15), கருண் நாயர் (13), அக்சர் படேல் (02), ஸ்டப்ஸ் (38) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சமீர் ரிஷ்வி (40) ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். அசுதோஷ் சர்மா (14) ரன்களில் ரன் அவுட் மூலம் வெளியேறினார்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி, 07 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மாத்திரம் எடுத்தது. சென்னை அணி சார்பில், அகில் ஹொசைன், முகேஷ் சவுத்ரி, ஓவர்டன், குர்ஜபனீத் சிங் தலா 01 விக்கெட்டினையும், நூர் 02 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
அடுத்து, 156 என்ற வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அணியின் கேப்டன் ருத்து ராஜ் 06 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உர்வில் படேல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து நிதானமாகவும், அதிரடியாகவும் ஆடிய சஞ்சு சாம்சன் 87 ரன்களிலும், கார்த்திக் சர்மா 41 ரன்களில் ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

டெல்லி அணி சார்பில் அக்சர் படேல், லுங்கி இன்கிடி தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார். இதன் மூலம் 17.3 ஓவர்களில் 08 விக்கெட்டுகள் மூக்கால் சென்னை அணி 159 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. போட்டியின் ஆட்டநாயகன் ஆனார் சஞ்சு சாம்சன்..!