'தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது என்கிறார் ஓ.எஸ்.மணியன்; தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்கிறார் லீமா ரோஸ் மார்ட்டின்'; எதுதான் உண்மை..? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. எனினும், ஆட்சி அமைக்​கத் தேவை​யான பெரும்​பான்மை பலத்தை பெறவில்லை என்பதால் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

நேற்றையதினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் 108 இடங்களை தவெக கைப்பற்றி அணைத்து தேர்தல் கணிப்புகளை தவிடுபொடியாக்கியுள்ளது.

இந்த தேர்தலில் திமுக - 59, அதிமுக - 47, காங்கிரஸ் - 05, பாமக - 04, ஐயூஎம்எல் - 02, இந்திய கம்யூனிஸ்ட் - 02, விசிக - 02, மார்க்சிஸ்ட் - 02, பாஜக - 01, தேமுதிக - 01, அமமுக - 01 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

 

இந்நிலையில், தவெக ஆட்சி அமைக்க எந்தெந்த கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெட்ரா ஓ.எஸ்.மணியன், சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அதன் பின்னர் செய்தி நிறுவனம் முன்வைத்த கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

அப்போது, 'இது சந்திப்பு அல்ல. எங்கள் கட்சியின் பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவித்து விட்டு வந்துள்ளேன். தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி' என்று தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவரிடம், 'ஆட்சி அமைக்க தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்குமா?’ என செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் 'நோ' என்று பதிலளித்துள்ளார். ஆனால்,  லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள லீமா ரோஸ் மார்ட்டின், 'அதிமுகவுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது' என்று தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OS Manian states that the AIADMK will not extend support for the TVK to form a government


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->