மேற்குவங்கத்தில் 07 அல்லது 08-ஆம் தேதி; அசாமில் 09 அல்லது 10 ஆம் தேதி பாஜக அரசு பதவியேற்க ஏற்பாடு..! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றிப் பெற்றுள்ளது. இதனையடுத்து புதிய அரசு அமைப்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வந்தது. இந்த தேர்தலில், பாஜக முதல்முறையாக 206 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்க சட்டசபையின் பதவிக்காலம் வரும் 07-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, வரும் 07-ஆம் தேதி அல்லது 08-ஆம் தேதியன்று புதிய பாஜக அரசு பதவியேற்க ராட்டுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி, தேர்தல் நடைமுறைகளை தேர்தல் ஆணையம் நாளையுடன் (மே 06) முடிக்க திட்டமிட்டுள்ளது. இத புதிய அரசின் பதவியேற்பு விழா கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானம் அல்லது ராஜ் பவனில் பிரம்மாண்டமாக நடக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். பவானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற சுவேந்து அதிகாரி, முதல்வராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்தது. தற்போது நடந்த தேர்தலில், மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி 101 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் பாஜக மட்டும் தனியாக 82 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அசாமில் தற்போதைய சட்டசபையின் ஆயுட்காலம் வரும் 20-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

அங்கு பாஜகவிற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்துள்ளதால் வரும் 09-ஆம் தேதி அல்லது 10-ஆம் தேதியன்று புதிய அமைச்சரவை பதவியேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அசாம் மாநில முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா இரண்டாவது முறையாக மீண்டும் பதவியேற்கவுள்ளார்.

இதனிடையே, இரு மாநிலங்களிலும் சட்டசபை குழு தலைவரை தேர்ந்தெடுக்க விரைவில் கூட்டம் நடத்தப்படவுள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்திய பின் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arrangements for the BJP government to assume office in West Bengal and Assam


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->