அந்த தங்கத்தோட வாயில சீனியை தான் போடணும்..!! ப.சிதம்பரம் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவந்த தர்பார் திரைப்படத்தை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்து கொண்டு இருக்கின்றனர். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவானது சென்னையில் நடைபெறும் என்று அறிவிப்புகள் வெளியாகி., ரசிகர்களின் பெரும் மத்தியில் வெளியானது. 

இந்த விழாவின் போது ரஜினிகாந்த் அரசியல் பேசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில்., அரசியல் பேச்சும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசிய சமயத்தில்., இயக்குனர் பாலச்சந்தரால் ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டப்பட்டேன். நான் நல்ல நடிகனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். 

அவரின் நம்பிக்கையை நான் காப்பாற்றினேன்.இதனைப்போன்று மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை கட்டாயம் பேசுவேன்.. அது என்றும் வீண்போகாது.. ஒரு வெற்றிக்கு காலம்., நேரம்., சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை போன்றவை அமைய வேண்டும். அதற்காக காத்திருந்து வெற்றியை பெற வேண்டும். 

darbar, darbar movie,

எனது பொறுமையை பலரும் எதிர்மறையாக பேசி வரும் நிலையில்., எனது சூசகமான அரசியலிற்கு நேரம்., காலம் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை வரும்.. அதனை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. வரும் 2021 ஆம் வருடத்தில் அரசியலில் அதிசயமும்., அற்புதமும் நிகழும் என்று தெரிவித்தார். 

இந்த பேச்சிற்கு பல விமர்சனங்களும்., கொண்டாட்டமும்., எதிர்மறை கருத்துக்களும் வந்துகொண்டு இருக்கும் நிலையில்., சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரைக்குறியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அரசியலில் மாற்றம் வரும் என்று கூறிய ரஜினியின் வாயில் சர்க்கரை போட வேண்டும் என்று கூறினார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

p chidambaram speech about rajini election 2021


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal