மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த மகன்.. தாய் மீது கொடூர தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தனபால் இவரது மகன் சூர்யா. இவர் அதே கிராமத்தில் முடி திருத்தும் வேலை செய்து வருகின்றார்.

இதில் சூர்யா தொழிற்கல்வி படித்து முடித்துவிட்டு சென்னையில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் சூர்யா அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இதில் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண்ணின் உறவினர்கள் சூர்யாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று சண்டையிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் சூர்யாவின் தாய் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் அங்கு வந்த அந்த பெண்ணின் உறவினர்கள் சூர்யாவின் தாயிடம் உன் மகன் எங்கே எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சூர்யாவின் தாயை தலைமுடியை இழுத்து நடுரோட்டில் கொடூரமாக தாக்கியுள்ளனர். தற்போதைய இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Other caste marriage kallakkurichchi Fight


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->