#BigBreaking | பொதுச்செயலாளர் தேர்தலுக்கு சிக்கல்! ஓபிஎஸ் தரப்பு கூட்டாக பேட்டி! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள்  உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர்.

பொதுச்செயலாளர் தேர்தலில் 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளிட்ட பல விதிகள் இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது.

அதே சமயத்தில் இந்த பொதுச்செயலாளர் தேர்தலை தடுக்க ஓபிஎஸ் சட்டப்போராட்டத்தை முன்னெடுப்பர் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சற்று முன்பு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்ததாவது, "மக்கள் மன்றத்தில் தோல்வியை சந்தித்தபோதிலும், எடப்பாடி பழனிசாமி இன்னும் திருந்தவில்லை. 

மாவட்டம் தோறும் உள்ள நிர்வாகிகளை ஓபிஎஸ் சந்திக்க உள்ளார். பொதுக்குழு தீர்மான விவகாரம் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் உள்ள போது, யார் இவர்களுக்கு தேர்தல் நடத்த அனுமதி வழங்கினார்கள். 

எப்படி இவர்கள் தேர்தலை நடத்தலாம்? சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். அதிமுகவை சீரழிக்க எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Side Press meet ADMK Election 2023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->