ஆபரேஷன் சிந்தூர்..மத்திய அரசுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு.!
Operation Sindur Chief Minister Rangasamy praises the central government
பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இதனால் , இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்தநிலையில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்களும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.அந்தவகையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" என்கிற பெயரில் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்திய இராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முற்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், இந்திய இராணுவத்திற்கும் எனது சார்பிலும் புதுச்சேரி மக்கள் சார்பிலும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிராகவும், நாட்டின் பாதுகாப்பிற்காகவும் இந்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் புதுச்சேரி அரசு என்றும் துணைநிற்கும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.
English Summary
Operation Sindur Chief Minister Rangasamy praises the central government