#BigBreaking | ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் : தமிழக அரசு எடுத்த அதிர்ச்சி முடிவு.! - Seithipunal
Seithipunal


ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்து, பொது மக்களின் கருத்தை அறிய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். 

மேலும் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்தவர்கள் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபடுவது அடுத்தடுத்து அரங்கேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து தொடர்ந்து தமிழகத்தில் குரல் கொடுத்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்தய அழுத்தத்தால், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால் இது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசாங்கம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப் போவதாக தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறதே தவிர, தடை விதித்த பாடு இல்லை.

அதற்குள் சுமார் 27 பேர் இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தற்கொலை செய்து தங்களது உயிரை மாய்த்து உள்ளனர்.

இந்த நிலையில், ரம்மி உள்ளிட் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்து, பொது மக்களின் கருத்துக்களை அறிய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களிடமும் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து வெளியான தகவலின் படி, ஆன்லைன் சூதாட்டங்களுக்கான தடை குறித்து வருகின்ற 12ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக மக்களின் கருத்தையே இப்போதுதான் அரசு கேட்க போகிறதா? இன்னும் எத்தனை வருஷம் ஆகும் தடை செய்ய என்று சமூக ஆர்வலர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் அரசு அலட்சியம் காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

online game ban issue dmk govt new decision


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->