88 பயனாளிகளுக்கு இணைய வழி இலவச வீட்டுமனை பட்டா..அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்!
Online free house site pattas for 88 beneficiaries Decision made in a meeting chaired by the Minister
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் அரசு அதிகாரிகளுடன் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டார்.
ஒட்டன்சத்திரம் நகராட்சி சிறப்பு ஆய்வுக் கூட்டத்தில் 18 வார்டுகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் 88 பயனாளிகளுக்கு இணைய வழி இலவச வீட்டுமனை பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் அரசு அதிகாரிகளுடன் சிறப்பு ஆய்வுக்கூட்டம் ஆணையாளர் சுவேதா தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் க.திருமலைசாமி துணைத்தலைவர் ப..வெள்ளைச்சாமிமுன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்று நகராட்சியில் நடைபெறுகின்ற திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார் .இதில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள18 வார்டுகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் 88 பயனாளிகளுக்கு இணைய வழி இலவச வீட்டுமனை பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு புதிதாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மாணவ மாணவிகள் எளிதாக உணவு உண்ணும் வகையில் தரையில் அமர்வதற்கு பாய் வழங்க தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட து.
இந்த ஆய்வுக்கூடத்தில் நகராட்சி பொறியாளர் சுப்பிரமணிய பிரபு நகர் மன்ற உறுப்பினர்கள் கண்ணன், ஜெயமணி சரவணன் , சாந்தி ஆறுமுகம் ,சாந்தி கருப்பணன், அருள்மணி நாட்ராயன், செல்வராஜ்,தமிழரசி,ரமேஷ், முகம்மது மீரான் கிருஷ்ணசாமி, ஸ்ரீதேவி, பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் துறை சார்ந்த அலுவலர்களும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
English Summary
Online free house site pattas for 88 beneficiaries Decision made in a meeting chaired by the Minister