1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை விடுமுறை - எந்த மாவட்டத்தில் தெரியுமா?
one to five class holiday in vellore
1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை விடுமுறை - எந்த மாவட்டத்தில் தெரியுமா?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதிலும் குறிப்பாக வேலூரில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வேலூரில் கனமழைக் காரணமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் வழக்கம்போல செயல்படும் என்று அறிவித்துள்ளார்.
English Summary
one to five class holiday in vellore