நாமக்கல் : வடமாநிலத் தொழிலாளிகள் தங்கியிருந்த குடிசையில் பெட்ரோல் குண்டுவீச்சு - ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்.!!
one people died and three peoples injured for fire accident in namakkal
வடமாநிலத் தொழிலாளிகள் தங்கியிருந்த குடிசையில் பெட்ரோல் குண்டுவீச்சு - ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்.!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜேடர்பாளையம் சரளைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் வெல்ல உற்பத்தி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இந்த ஆலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் அங்குள்ள கொட்டகையில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கொட்டகையில் நேற்று முன்தினம் இரவு வட மாநிலத் தொழிலாளர்கள் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் கொட்டகையின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனால், கொட்டகை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளிகள் நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேரில் ஒருவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், அப்பகுதியில் தங்கி இருக்கும் வட மாநில தொழிலாளர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் போலீசார் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மொத்தம் பதினைந்து இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
one people died and three peoples injured for fire accident in namakkal