சோகம் - தூத்துக்குடி அருகே வெடித்து சிதறிய பட்டாசு ஆலை - ஒருவர் பலி.!!
one man died for firecrackers factory fire accident in thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டையபுரத்தில் இனாம் அருணாசலபுரம் –தோமாலைபட்டி அருகே உள்ள ஜாஸ்மின் என்ற பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் நான்கு அறைகள் தரைமட்டமானது. இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது உடல் கருகிய நிலையில் கிடந்த ஒரு ஆணின் சடலத்தை தீயணைப்பு துறையினர் கைபற்றி உள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பட்டாசு ஆலையில் சுமார் 35 பேர் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீட்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னரே இந்த விபத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற விவரம் தெரியவரும். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
one man died for firecrackers factory fire accident in thoothukudi