ஒரே ஆப்... ஓயாத பயணம்! இனி 'சென்னை ஒன்' செயலியிலேயே வெளியூர் பேருந்துகளுக்கு டிக்கெட் எடுக்கலாம்...!
One app Endless journey Now you book tickets out of town buses Chennai One app
சென்னையில் போக்குவரத்து சேவைகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து, பயணிகளுக்கு எளிமையான அனுபவத்தை வழங்கும் நோக்கில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) உருவாக்கப்பட்டது. இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, ‘சென்னை ஒன்’ என்ற நவீன செயலி அறிமுகப்படுத்தப்பட்டு, நகரப் பயண முறையில் புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியின் மூலம் மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பயணிக்க தேவையான டிக்கெட்டுகளை க்யூஆர் குறியீடு வழியாக உடனுக்குடன் பெற முடியும். குறிப்பாக மாநகர பேருந்துகளில் காசு மாற்றம் இல்லாமல் சுலபமாக டிக்கெட் பெறும் வசதி கிடைப்பதால், சென்னைவாசிகளிடையே இந்த செயலி வேகமாகப் பிரபலமடைந்துள்ளது.
இந்நிலையில், இந்த ‘சென்னை ஒன்’ செயலியின் பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி, நகரத்திற்குப் புறம்பான அரசு பேருந்துகளுக்கும் இந்த செயலி வழியாக டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளும், இனி ஒரே செயலியின் மூலம் டிக்கெட் பெறும் வகையில் புதிய மென்பொருள் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டால், பயணிகள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல், சுலபமாகவும், வேகமாகவும் டிக்கெட் பெற முடியும் என்பதால் இது பெரும் பயனளிக்கும் திட்டமாக அமையும் என பயணிகள் உற்சாகமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
One app Endless journey Now you book tickets out of town buses Chennai One app