திருமணமான 10-வது நாளில் மனைவி கர்ப்பம் ... அதிர்ச்சியில் மயங்கிய கணவன்! - Seithipunal
Seithipunal


தன்னுடன் பணியாற்றிய சசிசேகர் என்பவருடன் பேசி பழகி தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருந்ததால், தற்போது கர்ப்பம் அடைந்துள்ளேன் எனக்கூறியுள்ளார்.


சேலத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் கம்பேனியில் வேலை பார்த்து வந்த இளம்பெண் ஒருவர் , கடந்த ஜனவரி மாதம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒரு வாலிபரை திருமணம் செய்துகொண்டார். இந்தநிலையில் திருமணமான 10 நாளில் அந்த பெண் வாந்தி எடுத்ததை தொடர்ந்து அவரை பரிசோதித்த டாக்டர்கள்  2 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக  கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த புது மாப்பிள்ளை, திருமணமாகி 10 நாளில் எப்படி 2 மாதம் கர்ப்பம் என்று மனைவியிடம் கேட்டார்.

அப்போது அந்த இளம் பெண் பழைய நினைவுகளை கண்ணீர் விட்டு கணவரிடம் கூறியுள்ளார்.அதில்  அவர் கூறுகையில்,தன்னுடன் பணியாற்றிய சசிசேகர் என்பவருடன் பேசி பழகி தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருந்ததால், தற்போது கர்ப்பம் அடைந்துள்ளேன் எனக்கூறியுள்ளார்.

இதையடுத்து கருவை கலைத்து விட முடிவு செய்த புது மாப்பிள்ளை தனது நண்பரான கோபால் என்பவரையும் உடன் சசிசேகரை  உடன் தேடி சென்றார். அப்போது  சசிசேகரை பிடித்து எச்சரித்த 2 பேரும் கருவை கலைக்க ரூ.80 ஆயிரம் பணம் கேட்டனர்.  உடனடியாக கேட்ட பணத்தை கொடுத்துவிட்டார். இதையடுத்து மனைவியின் கருவை கலைத்த புதுமாப்பிள்ளை, தனது மனைவியுடன் தொடர்ந்து குடும்பம் நடத்தி வந்தார்.

இந்தநிலையில் , புது மாப்பிள்ளையுடன் சென்ற கோபால், சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடிகளை அழைத்து சசிசேகரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடு வோம், என்று மிரட்டியதனால் பயந்து போன சசிசேகர் ரூ.9 லட்சம் பணத்தை கொடுத்தார்.

தொடர்ந்து அந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டியதால் செய்வதறியாது திகைத்த சசிசேகர், அழகாபுரம் போலீசில்புகார் செய்தார், இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் அந்த பெண்ணின் கணவரின் நண்பரான கோபால் மற்றும் பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்ட்புட் மோகன், பூமாலை ராஜன், உலகநாதன் ஆகிய 4 பேர் மீதும் மிரட்டி ரூ.9 லட்சம் பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்து அவர்களை தேடினர். அப்போது 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

On the 10th day of marriage the wife is pregnant The husband is stunned in shock


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->