ஜூலை 30ஆம் தேதி விண்ணில் பாயும் நிசார் செயற்கைக்கோள்..இஸ்ரோ அறிவிப்பு!
On July 30 the NISAR satellite will soar into the sky ISRO announcement
இந்திய விண்வெளி ஆய்வூ ராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா இணைந்து தயாரித்துள்ள நிசார் (NISAR) செயற்கைக்கோள், பலமுறை தள்ளிவைக்கப்பட்ட பிறகு, ஜூலை 30ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
இச்செயற்கைக்கோள், பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட அதிநவீன ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் ஆகும். இதில் “நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார்” தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு தொடக்கத்தில்வே ஏவ திட்டம் இருந்தாலும், கிரகணப் பருவம் போன்ற இயற்கை காரணங்கள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக திட்டம் பலமுறை தள்ளிவைக்கப்பட்டது.
முன்னதாக ஜூலை 16ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ராக்கெட்டில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மேலும் சில சிக்கல்களால் ஜூலை 30ஆம் தேதிக்குத் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நிசார் செயற்கைக்கோளின் சிறப்பம்சங்கள்:
பூமியிலிருந்து 747 கிமீ உயரத்தில் சூரிய ஒத்திசைவான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.எடை: 2,800 கிலோ.ஆயுட்காலம்: 3 ஆண்டுகள்.மின் திறன்: 6,500 வாட்ஸ்.மொத்த செலவு: ரூ.1,805 கோடி (நாசா – ரூ.1,016 கோடி, இஸ்ரோ – ரூ.788 கோடி).
L-Band (24 செ.மீ) மற்றும் S-Band (12 செ.மீ) இரட்டை அலைநீளங்கள் பயன்படுத்தப்படும்.இது உலகில் முதன்முறையாக இரண்டும் சேர்த்து பயன்படுத்தும் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் ஆகும்.1 மாதத்தில் 6 முறை வரை வரைபடம் உருவாக்கும் திறன்.5-10 மீட்டர் அளவிலான தெளிவுத்திறனுடன் தரவுகளை சேகரிக்கும்.பனிப்பாறைகள், காடுகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றின் மாற்றங்களைத் துல்லியமாகக் கண்காணிக்கும்.
நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு போன்ற பேரிடர்களையும் முன்கூட்டியே கணிக்க உதவும்.அண்டார்டிக்காவின் கிரையோஸ்பியர் பகுதிகள் – பனிமலைகள், உறைந்த நீர், பனிப்புயல்கள் ஆகியவற்றின் நிலையை மதிப்பீடு செய்யும்.நிசார் செயற்கைக்கோள், பூமியின் இயற்கை சூழலை அறிந்துகொள்ளவும் பாதுகாப்பாக நடத்தவும் ஓர் முக்கிய முனைவேந்தியாக இருக்கும் என்று நாசா–இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
English Summary
On July 30 the NISAR satellite will soar into the sky ISRO announcement