அய்யயோ மக்களே உஷார்..ஏசி வெடித்து முதியவர் பலி!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் ஏசி வெடித்து முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் பகுதி சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கணவர் காமராஜ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சாந்தியவரை பிரிந்து தாயார் வீட்டில் மகன் மகளுடன் சென்றுவிட்டார். இதனால் காமராஜ் தனியாக வசித்து வந்தார். குடிப் பக்கத்திற்கு ஆளான காமராஜ் தினமும் மது குடித்து விட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வேலைக்கு சென்று போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

இரவு உணவை முடித்த பின் காமராஜ் தனது அறையில் உள்ள ஏசியை ஆன் செய்துவிட்டு தூங்கி உள்ளார். அவரது உறவினரும் மகன் வினோத்குமார் வேலைக்கு சென்று மீண்டும் நல்லறிவு வீட்டுக்கு வந்துள்ளார். நான் புது காமராஜ் தங்கியிருந்து அறையில் இருந்து கரும்பொகை வந்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார்.

அவரது சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது ஏசி வெடித்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது மேலும் அதிலிருந்து விழுந்த தீப்பொறியில் மெத்தையில் மீது விழுது தீப்பிடித்ததில் காமராஜ் தீயில் கருகி சடலமாக கிடந்ததும் தெரியவந்துள்ளது. தகவல் அறிந்துவந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காமராஜின் உடலை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old man killed in AC explosion


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->