வங்கி ஊழியர்களின் தரகுறைவான பேச்சு- முதிய தம்பதி எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


வங்கி ஊழியர்களின் தொல்லையால் முதிய தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்சாமி (55). இவருக்கு சவரியம்மாள்என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் தனது வீட்டின் அருகே சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். புது வீடு கட்டுவதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனியார் வங்கி ஒன்றில் சாமி 8 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையை தொடர் மழை பெய்து வருவதாலும் கொரோனா காரணமாகவும் அவரின் தொழில் சரியாக நடக்கவில்லை. இதனால், அவர் கடந்த 2 மாதங்களாக வங்கி கடன் தவணையை செலுத்த வில்லை என தெரிகிறது.

இந்நிலையில் வங்கி ஊழியர்கள் தொடர்ந்து அவரை கடன் தவணை கட்ட சொல்லி தொந்தரவு செய்து வந்ததோடு தரக்குறைவாக பேசியுள்ளனர். ஊழியர்களின் இந்த செயலால் மனம் உடைந்து போன அருள்சாமி மற்றும் அவரது மனைவி சவரியம்மாள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் பிள்ளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கி ஊழியர்களின் தரம் குறைந்த வார்த்தைகளால் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old couple comiites suicide Near Thanjavur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->