சூப்பர்! ஆபீஸ் போகும் வழியில் விபத்தில் சிக்கினால் முழு மருத்துவ செலவும் நிறுவனத்துடையதே... உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


பணியில் இருக்கும் போது விபத்து ஏற்பட்டால் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது சட்டம். இதனை விரிவுபடுத்தி, பணியிடத்திற்குச் செல்வதோ அல்லது திரும்புவதோ என்ற பயணத்தின்போது ஏற்படும் விபத்துகளுக்கும், பணியாளர் இழப்பீட்டுச் சட்டம் 1923ன் கீழ் ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சர்க்கரை ஆலை காவலாளி வேலைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்த வழக்கில், இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. வேலைக்கு செல்லும் அல்லது வீடு திரும்பும் வழியில் விபத்து ஏற்பட்டால், சிகிச்சைக்கான அனைத்து செலவுகளும் – மருத்துவரின் கட்டணம், மருந்துகள் உள்ளிட்டவை – முதலாளி ஏற்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், அலுவலகத்திற்கு செல்லும் மற்றும் திரும்பும் பயணம் பணியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. எனவே, இத்தகைய விபத்துகளில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, முதலாளி அல்லது காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்.

விபத்து நடந்தவுடன், அதுகுறித்து உடனடியாக முதலாளிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், விபத்துக்கான ஆதாரங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் இழப்பீடு பெற அவசியம் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவு, தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் முக்கியமான முன்னுதாரணமாக கருதப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Office Employee Accident Supreme Court compensation


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->