அதிர்ச்சி காணொளி! கிட்னி திருடியதை பெருமையாக பேசிய திமுக MLA கதிரவன்! அதிமுக கணடனம்!
ADMK DMK MLA Kidney scam
அதிமுக விடுத்துள்ள கண்டன செய்தியில், "வாங்க வாங்க கிட்னி எடுத்துடலாம் வாங்க"
-மணச்சநல்லூர் திமுக MLA கதிரவன்.
மிக Serious-ஆன கிட்னி திருட்டு வழக்கை இந்த திமுக அரசின் காவல்துறையும், அரசு இயந்திரமும் எவ்வளவு எதேச்சதிகாரப் போக்குடன் கையாள்கிறது என்பதற்கு இதுவே சாட்சி!
கண்துடைப்புக்கு தன்னுடைய மருத்துவமனைக்கு Kidney Transplant அனுமதி ரத்து செய்ததால், தன் மருத்துவமனை மீது தன் கட்சியின் அரசு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற அதிகாரத் திமிரில் தான் இவரால் இப்படி பேச முடிகிறது.
ஆணவத்துடனும் அதிகாரத் திமிருடனும் இவர் பேசிய பிறகும், இந்த வழக்கை திமுக அரசு விசாரிப்பதில் எந்த தார்மீக அடிப்படையும் இல்லை.
இதை மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்; குற்றவாளிகள் கூண்டேறுவர்!
ஏழை மக்களிடம் ஆசை வார்த்தை கூறி கிட்னி திருட்டு (அ) முறைகேடு செய்துவிட்டது, அதை நகைப்புடன் பேசி, பூசி மொழுகும் அளவிற்கு அவல நிலைக்கு கொண்டுசென்றுள்ள இந்த விடியா திமுக ஆட்சியிடம் இருந்து #மக்களைக்_காப்போம், தமிழகத்தை_மீட்போம்" என்று தெரிவித்துள்ளது.