புழு கலந்த உணவு...! பொறுமை இழந்த மாணவர்கள்...!-ஆவடி கல்லூரி விடுதியில் பரபரப்பு போராட்டம்!
Food mixed with worms Students lose patience heated protest Avadi college hostel
சென்னை ஆவடியில் இயங்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பரபரப்பு சம்பவம் இடம்பெற்றது. அந்தக் கல்லூரி விடுதியில் தங்கி வரும் நூற்றுக்கணக்கான மாணவர்கள், தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றம் சாட்டி நேற்று கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவர்கள் தெரிவித்ததாவது,"நாங்கள் தினமும் விடுதியில் வழங்கப்படும் உணவை சாப்பிட முடியாத அளவுக்கு அதன் தரம் மோசமாக உள்ளது.
பலமுறை புகார் அளித்தும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புழு, புச்சி கலந்த உணவைப் பார்த்ததும் வெறுப்பாக இருக்கிறது" எனத் தெரிவித்தனர்.
இதனால் மாணவர்கள் விடுதி வளாகத்தில் திரண்டுக் கொண்டு, நிர்வாகத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும், போராட்டம் காரணமாக கல்லூரி வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நிர்வாகம் தற்காலிகமாக உணவு வழங்கும் ஒப்பந்த நிறுவனத்திடம் விளக்கம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Food mixed with worms Students lose patience heated protest Avadi college hostel