17 வது நாளாக தொடரும் தடைகள்...! ஒகேனக்கல்லில் நீர்வரத்து எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

இதில் கடந்த சில தினங்களாக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நேற்று வினாடிக்கு 32,000 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது.

இந்த நிலவரத்தில், இன்று காலை கண்காணிப்பின் படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 28,000 கன அடியாக குறைந்துள்ளது. மேலும், ஒகேனக்கல்லில் உள்ள சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இருந்தாலும், சுற்றுலா பயணிகள் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 17-வது நாளாக நீடிக்கிறது.

மேலும், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Obstructions continue 17th day Do you know how much water is flowing in Hogenakkal


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->