வேலூர் - கோவில் திருவிழாவில் கையில் சிகரெட், மதுபாட்டில்களுடன் நடன நிகழ்ச்சி.!! - Seithipunal
Seithipunal


வேலூர் - கோவில் திருவிழாவில் கையில் சிகரெட், மதுபாட்டில்களுடன் நடன நிகழ்ச்சி.!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் அருகே தென்புதூர் கிராமத்தில் உக்கிரகாளி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இரவு ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 

இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை காண்பதற்காக பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சிகள் இரவு 7 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெற்றது. அதில், சுமார் 25 பேர் நடனம் ஆடினர்.

அப்போது, நடனம் ஆடிய பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடியது மட்டுமில்லாமல் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்டவற்றையும் செய்து காண்பித்துள்ளனர்.

இதனால், பொதுமக்கள் சிலர் முகம் சுழித்ததோடு, ஆபாசமாக இருப்பதாக கூறி நடன நிகழ்ச்சியில் இருந்து இடையிலேயே வெளியேறினர். மேலும், பொது இடத்தில் இதுபோன்ற ஆபாச நடன நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

obscene dance programme at kovil function with liquor bottle and ciggeret in vellore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->