ஈரோட்டில் பரபரப்பு - செவிலியர் பயிற்சி மாணவி தற்கொலை.!
nursing training student sucide in erode
ஈரோட்டில் பரபரப்பு - செவிலியர் பயிற்சி மாணவி தற்கொலை.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏராளமான மாணவிகள் செவிலியர்களாக பயிற்சி பெற்று வருகின்றனர். அதில், திண்டுக்கல் மாவட்டம், பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவரது மகள் யசோதா என்பவரும் செவிலியராக பயிற்சி பெற்று வந்தார்.
அதற்காக மருத்துவமனையின் அருகிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தோழிகளுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று அறையின் கழிவறைக்கு சென்ற யசோதா நீண்ட நேரமாக திரும்ப வராமால் இருந்துள்ளார்.

இதனால், அவருடன் தங்கி இருந்தவர்கள் கழிவறைக்குச் சென்று பார்த்த போது, அங்கு யசோதா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், யசோதாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் யசோதா செல்லும் வழியிலேயே யசோதா இறந்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து யசோதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். செவிலியர் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
nursing training student sucide in erode