தூத்துக்குடியில் சளி பிரச்சனை தீர ஆவி பிடித்த நர்சிங் மாணவி - மயங்கி விழுந்து பலி.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் சளி பிரச்சனை தீர ஆவி பிடித்த கல்லூரி மாணவி - மயங்கி விழுந்து பலி.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே மேலசேர்ந்தபூமங்கலத்தை சேர்ந்தவர் கோமதிநாயகம். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில், இளைய மகள் கவுசல்யா அதேபகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கவுசல்யாவிற்கு கடந்த சில நாட்களாக சளிப் பிரச்னை இருந்துள்ளது. 

இதற்காக கவுசல்யா நேற்று கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பு வெந்நீரில் மருந்தைப் போட்டு ஆவிப் பிடித்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வெந்நீர் பாத்திரத்திலேயே தலை கவிழ்ந்து மயங்கி விழுந்து காயமடைந்துள்ளார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கவுசல்யாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை சார்பில் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி போலீஸார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nursing student died in thoothukudi attur


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->