குடிமக்களின் பாதுகாப்பை விட வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமில்லை.. பிரதமர் மோடி பேச்சு! - Seithipunal
Seithipunal


தேசிய பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை விட வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

மராட்டிய மாநிலம் நவிமும்பையில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை  திறந்து வைத்தபின் பிரதமர் மோடி பேசியதாவது:-நவி மும்பை விமான நிலையம் ஆசியாவின் மிகப்பெரிய இணைப்பு மையமாக இருக்கும். மும்பை போன்ற ஒரு நகரத்தில் இவ்வளவு கவனமாக கட்டுமானத்துடன் நிலத்தடி மெட்ரோவைத் தொடங்குவது ஒரு பெரிய சாதனை.

மும்பை பொருளாதார தலைநகரம் மட்டுமல்ல, இந்தியாவின் மிகவும் துடிப்பான நகரங்களில் ஒன்றாகும். காங்கிரஸின் பலவீனம், பயங்கரவாதிகளை பலப்படுத்தியது. இந்தத் தவறுக்காக நம் நாடு மீண்டும் மீண்டும் உயிர் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. எங்களை பொறுத்தவரை, தேசிய பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை விட வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமில்லை. 

இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் இந்தியாவை உலகளாவிய விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் (MRO) மையமாக மாற்றுவதே தமது அரசாங்கத்தின் இலக்கு. கடந்த பத்தாண்டுகளில் லட்சக்கணக்கான மக்கள் முதல் முறையாக வானில் பறந்து, தங்கள் கனவுகளை நனவாக்கியுள்ளனர்
இவ்வாறு அவர் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nothing is more important to us than the safety of citizens Prime Minister Modis speech


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->